மோட்டோ இ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோ இ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

மோட்டோரோலா நிறுவனம் இ 13 என்ற பெயரிலான புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலாக வந்துள்ளது. 6.5 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்ட இதில் ஆக்டாகோர் யுனிசெக்ஸ் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது.

பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, பச்சை, வெள்ளை நிறங்களில் வந்துள்ள இந்த மாடல் ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.8,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com