ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

5 மாடி கட்டிடம் ஒன்று ஆற்றில் மிதந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

பீஜிங்,

இணையதளத்தில் எது, எப்போது வைரலாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இன்று வைரலாகும் ஒரு விஷயம் நாளை மறக்கப்படலாம். ஆனால் சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இணையதள ஆர்வலர்கள் இந்த வீடியோ குறித்து வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மிதக்கும் ஓட்டலான அந்த 5 மாடி கட்டிடம் கொள்கை மாற்றம் காரணமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, 2 படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் பார்ப்பதற்கு அந்த கட்டிடம் தானாகவே மிதந்து செல்வது போலவே இருப்பதுதான் அந்த வீடியோ வைரலாவதற்கு காரணம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ அப்போதே டுவிட்டரில் பகிரப்பட்டது. ஆனால் அது இந்த அளவுக்கு வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com