கேலி செய்தவர்களை சாடிய அமலாபால்

தமிழில் மைனா படத்தில் நடித்து பிரபலமானவர் அமலாபால். தெய்வத்திருமகள், தலைவா, வேட்டை, நிமிர்ந்து நில், ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
கேலி செய்தவர்களை சாடிய அமலாபால்
Published on

அமலாபால் தனது கணவரை விவாகரத்து செய்த பிறகு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கடற்கரையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் ஒரு பெண் தனது மனம் உடல் உள்ளிட்ட அனைத்து நிலையையும் அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவளாக இருக்கிறாள். பெண்ணுக்கு விரும்புவதை செய்யும் திறமை இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.

அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் அமலாபால் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதாக பாராட்டினர். இன்னும் சிலர் கவர்ச்சி உடை அணிந்த அமலாபாலை கேலி செய்து விமர்சித்தனர். தன்னை கேலி செய்தவர்களை அமலாபால் சாடி உள்ளார். அவர் கூறும்போது, பெண் தனது விருப்பப்படிதான் உடை அணிவாள், வாழ்க்கையையும் நகர்த்துவாள். அவள் அணியும் ஆடை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை. சமூக வலைத்தளத்தில் பெண்களை அவதூறு செய்வதை நிறுத்தவும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com