பாகிஸ்தானில் ஒரே நாளில் மேலும் 3,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தானில் ஒரே நாளில் மேலும் 3,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

இஸ்லாமாபாத்,

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா தோன்றிய இடமாக சீனா கருதப்படுகிறது. அங்கு இதுவரை 83,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த எண்ணிக்கையை பாகிஸ்தான் தற்போது முந்தியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,985 ஆகும். இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 249 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 17-வது இடத்தையும், சீனா 18-வது இடத்தையும் பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 1,838 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 31 ஆயிரத்து 198 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கொரோனாவால் சிந்து மாகாணத்தில் 33,536 பேரும், பஞ்சாபில் 33,144 பேரும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com