புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x

வரலாறு காணாத புதிய உச்சத்தை வெள்ளி விலை தொட்டிருக்கிறது. நேற்று, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த அதே நேரத்தில், வெள்ளி விலையும் அசூர வேகத்தில் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதம் வரை ‘கிடுகிடு'வென உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை கடந்த மாதம் சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருக்கிறது.

அந்த வகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வந்தது. வெள்ளி விலையோ, ‘டாப் கியர்' போட்டு பறக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் அதிகரித்திருந்த சூழலில், நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டதை பார்க்க முடிந்தது. நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது. தற்போது அதனை தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாமல், தொழில்துறை தேவை சார்ந்த உலோகமாக அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது.

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை இன்றும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.215-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

12.12.2025- ஒரு சவரன் ரூ.98,000

11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400

10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240

09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

1 More update

Next Story