2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் பெரும்பங்கு வகிக்கும் - பிரதமர் மோடி

2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் பெரும்பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
Published on

புதுடெல்லி,

டெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-

கடந்த 200 ஆண்டுகளாக, பூமிக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரி போன்ற பொருட்களைத்தான் மின்சார தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, பூமிக்கு மேலே கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை போன்ற வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com