மந்திரிசபை விரிவாக்கம்; கர்நாடக முதல்-மந்திரி 8-ந் தேதி டெல்லி பயணம்

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 8-ந்தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 8-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக செல்லும் அவர், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.

அப்போது மந்திரிசபையில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவது மற்றும் வாரியங்களுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்வது, அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு ஏதாவது பதவிகளை வழங்கி சரிசெய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்.

மேலும் சிந்தகி, ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட யாருக்கு டிக்கெட் வழங்குவது, அந்த தொகுதிகளை வெல்ல வியூகம் அமைப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார். முதல்-மந்திரியின் டெல்லி பயணத்தை முன்னிட்டு, மந்திரி பதவியை பெற வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள், டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்திக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com