கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

தேனி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.
கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
Published on

தேனி:

கிறிஸ்தவ மக்கள் ஆண்டுதோறும் இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 2-ந் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி குருத்தோலை ஞாயிறையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தேனி ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம், சி.எஸ்.ஐ. புனித பவுல் ஆலயம் ஆகிய இடங்களில் சிறப்பு பிரார்த்தனையை தொடர்ந்து குருத்தோலை பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

அதுபோல், ஆண்டிப்பட்டி சி.எஸ்.ஐ. புனித பவுல் ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் குழந்தைகளுடன் பலர் கலந்துகொண்டனர். அதேபோன்று மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com