புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 30 ஆம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதுச்சேரியில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தினமும் மதியம் 2 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற கடைகளை திறக்க தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com