ரபாலேயில் காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை

ரபாலேயில் காணாமல் போன 2 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரபாலேயில் காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை
Published on

மும்பை,

நவிமும்பை ரபாலே எம்.ஐ.டி.சி. ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் தினேஷ் குப்தா. இவர் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் பிரதிக் என்ற மகன் இருந்தான். நேற்று முன்தினம் காலை தினேஷ் குப்தா வேலைக்கு சென்று விட்டார். இந்தநிலையில், சிறுவன் பிரதிக் திடீரென காணாமல் போனான்.

அவனது தாய் அவன் வழக்கமாக செல்லும் பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டு இருப்பான் என கருதி அவனை தேடவில்லை. இருப்பினும் வெகுநேரமாகியும் அவன் வராததால் அவர் பக்கத்து வீட்டில் சென்று விசாரித்தார்.

அப்போது சிறுவன் பிரதிக் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பதறி போன சிறுவனின் தாய் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தார். இருப்பினும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் காணாமல் போன சிறுவன், அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருப்பதாக மாலை நேரத்தில் தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு அவனது பெற்றோர் கதறி அழுதனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com