செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 750-ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 750-ஆக உயர்வு
Published on

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 259 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்தது. 403 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 873-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். 230 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com