கடையநல்லூரில், மோட்டார் சைக்கிள் மோதி நடைபயிற்சி சென்றவர் சாவு

கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் மோதி நடைபயிற்சி சென்றவர் பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூரில், மோட்டார் சைக்கிள் மோதி நடைபயிற்சி சென்றவர் சாவு
Published on

கடையநல்லூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இக்பால் நடுத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 51). இவர் நேற்றுமுன்தினம் காலை தனது நண்பருடன் கொல்லம் திருமங்கலம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். புதிய பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது, அந்த பகுதியில் வந்த மோட்டார் சைக்கிள் சாகுல் ஹமீது மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சாகுல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த வேலுசாமி (57) என்பவரின் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுசாமி புளியங்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com