மும்பையில் பங்கு தரகர், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

மும்பையில் பங்கு தரகர் மற்றும் அவரது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மும்பையில் பங்கு தரகர், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மும்பை,

மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்தவர் ஜிக்னேஷ் ஜோஷி(வயது 45). பங்கு தரகர். இவரது மனைவி காஷ்மீரா. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று தங்களின் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ஜிக்னேஷ் ஜோஷி அவரது குளியலறையிலும், அவரது மனைவி மனைவி காஷ்மீரா வீட்டின் படுக்கை அறையிலும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இருப்பினும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com