காஞ்சீபுரம் சுங்குவார்சத்திரம் அருகே கஜா புயல் நிவாரண நிதி வசூலித்த அண்ணன், தங்கை

கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணத்துக்கு இஷ்வந்த், இஷ்வந்தினி இருவரும் தங்களது சேமிப்பு பணம் ரூ.1,000 மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் நிவாரண நிதி வசூல் செய்தனர்.
காஞ்சீபுரம் சுங்குவார்சத்திரம் அருகே கஜா புயல் நிவாரண நிதி வசூலித்த அண்ணன், தங்கை
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பொளச்சூர் பகுதியை சோந்தவர் யுவராஜ். இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி யுவராணி. படப்பையில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகன் இஷ்வந்த் (வயது 12). அவர் அதே பகுதி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மகள் இஷ்வந்தினி (5) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறாள்

கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணத்துக்கு இஷ்வந்த், இஷ்வந்தினி இருவரும் தங்களது சேமிப்பு பணம் ரூ.1,000 மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் நிவாரண நிதி வசூல் செய்தனர். வசூலான நிதி ரூ.20 ஆயிரத்தை நாளை (திங்கட்கிழமை) அவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் வழங்க உள்ளனர். அவர்களுடைய செயலை பார்த்த அந்த பகுதி மக்கள் அவர்களை பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com