பேட்டையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு

பேட்டையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
பேட்டையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
Published on

பேட்டை,

நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் டவுனில் டீக்கடை நடத்தி வருகி றார். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 1-ந் தேதி புத்தாண்டு தினத்தன்று கணேசன், சாந்தி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். நெல்லை அருகே உள்ள பேட்டை பகுதியில் சென்ற போது ரோட்டின் குறுக்கே ஒருவர் திடீரென்று கடக்க முயற்சி செய்தார். இதைக்கண்ட கணேசன் மோட்டார் சைக்கிளில் திடீர் பிரேக் பிடித்தார். இதில் பின்னால் அமர்ந்திருந்த சாந்தி தவறி சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கணேசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

சாவு

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சாந்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com