குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டா.
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
Published on

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் சின்னகாலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் அஜய் (வயது 20). ரவுடியான இவர் மீது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக அஜய்யை கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அஜய்யை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து அஜய்யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com