பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்

பல்வேறு பெண்களுடன் காம களியாட்டத்தில் ஈடுபட்ட வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்
Published on

தஞ்சாவூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(வயது 36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் காசாளராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள வகாப் நகரை சேர்ந்த தாட்சர்(32) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் திருமணமான நாள் முதலே எட்வின் ஜெயக்குமார், மனைவியுடன் நெருங்கிப்பழகுவதை தவிர்த்து வந்தார். மேலும் பலமணி நேரம் அறைக்குள் செல்போனிலேயே நேரத்தை செலவழித்தார். மேலும் 50 பவுன் நகையை வரதட்சணையாக வாங்கி வருமாறு எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் துன்புறுத்தி உள்ளனர்.

ஆபாச வீடியோ

இதனால் சந்தேகம் அடைந்த தாட்சர் கணவரின் செல்போனை பார்த்தபோது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் அந்த பெண்களுடன் தனது கணவர் நெருக்கமாக இருந்த வீடியோ இருந்தது தெரிய வந்தது. அந்த படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண்களில் சிலர் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருடனும் எட்வின் ஜெயக்குமார் தொடர்பில் இருந்துள்ளார்.

இது தாட்சருக்கு தெரிய வந்ததும், அவருக்கு எட்வின் ஜெயக்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தாட்சர் தஞ்சை மாவட்டம் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

மணப்பாறை போலீசுக்கு மாற்றம்

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடம் திருச்சி மாவட்டம் மணப்பாறை என்பதால் இந்த வழக்கை மணப்பாறை போலீசுக்கு மாற்ற வல்லம் அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பான ஆவணங்களை கூடுதல் டி.ஜி.பி.க்கு அனுப்பி வைத்தனர்.

அவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீசுக்கு வழக்கு மாற்றம் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com