

பேரூர்,
கோவை பூ மார்க்கெட் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் முரளி (வயது 48). இவருடைய மகன் ரஞ்சித் (16). கோவையில் உள்ள லேத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் ரஞ்சித் தனது நண்பர்கள் 8 பேருடன் கோவை புட்டுவிக்கி அருகே உள்ள பேரூர் பெரியகுளத்தில் குளிக்க சென்றார். பின்னர் அவர்கள் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது ரஞ்சித் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் எதிர்பாராதவிதமாக அவர் நீரில் தத்தளித்தபடி மூழ்கினார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ரஞ்சித்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பேரூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அதற்குள் ரஞ்சித் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு பேரூர் பெரிய குளம் நிரம்பி உள்ளது. எனவே குளத்தில் பாதுகாப்பான அறிந்து அதில் இறக்க பொதுமக்கள் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.