பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட நடைமுறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் பிரிதிவிராஜ் சவான் வலியுறுத்தல்

பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட நடைமுறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் தெரிவித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட நடைமுறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் பிரிதிவிராஜ் சவான் வலியுறுத்தல்
Published on

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட நடைமுறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்மந்திரி பிரிதிவிராஜ் சவான் தெரிவித்தார்.

மராட்டியத்தில் 89 லட்சம் விவசாயிகள் பயனடையும் பொருட்டு, ரூ.34 ஆயிரம் கோடி பயிர்க்கடனை மாநில அரசு தள்ளுபடி செய்தது. முதற்கட்டமாக கடந்த வாரம் ரூ.4 ஆயிரம் கோடி வினியோகிக்கப்பட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வங்கி அதிகாரிகள் குழுவை சந்தித்து, இந்த பணியை முடுக்கி விட்டார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட நடைமுறையின்கீழ், 89 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்பின்னர், என்ன ஆனது? இத்திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருந்து உண்மையான விவசாயிகளின் பெயரை நீக்கி, போலி விவசாயிகளின் பெயரை இணைத்து, விவசாயிகளை கொச்சைப்படுத்துவது ஏன்?.

இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஏராளமான விவசாயிகளின் பெயர் ஒரே ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

இவ்வாறு பிரிதிவிராஜ் சவான் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com