கணவர் கண் எதிரே மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் சாவு

மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் கண் எதிரே மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் சாவு
Published on

விபத்து

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சையத் சுலைமான் (வயது 64). இவரது மனைவி கமீலா (54). இவர்கள் இருவரும் நேற்று மொபட்டில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரவாயல் அடுத்த வானகரம் அருகே வந்தபோது, ஆற்காடு நோக்கி சென்ற அரசு பஸ் பின்னால் வந்து கொண்டு இருந்தது. அப்போது மொபட் மீது அரசு பஸ் திடீரென மோதியது. இதில் மொபட்டில் பயணித்த இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.

சாவு

இந்த விபத்தில் கமீலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து போன கமீலா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சையத் சுலைமான் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் வேல்முருகன் (46), என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com