அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணம்

அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணமடைந்தார்.
Published on

நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த இளம் ராப் பாடகர் ஜரத் அந்தோணி ஹிக்கின்ஸ் (வயது 21). இவர் ஜூஸ் வேர்ல்ட் என்று அழைக்கப்படுவார். மன ஆரோக்கியம், இறப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு இவர் பாடிய ராப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் ஜரத், நேற்று முன்தினம் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவுக்கு விமானத்தில் சென்றார். சிகாகோவின் மிட்வே விமான நிலையத்தில் சென்று இறங்கியபோது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். வலிப்புக்கு பின்னர் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர். இளம் ராப் பாடகர் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com