தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல் - உதவி போலீஸ் சூப்பிரண்டு தகவல்

பாதை ஆக்கிரமிப்பில் கோஷ்டி மோதல் சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் அம்மன் கோவில் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் கீரை வியாபாரி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன், இமயம்குமார் உள்பட இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்.

இந்த கோஷ்டி மோதல் தொடர்பாக செங்காட்டில் உள்ள எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ஒரு லென்ஸ் பொருத்திய தொலைதூர துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் துப்பாக்கிக்குள் பொருத்தி சுடும் 4 கிலோ ஈய குண்டுகள், ஈய குண்டுகள் தயாரிக்க பயன்படும் கருவிகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இமயம்குமாரின் ஆதரவாளர்களான தலைமறைவாக உள்ள கூலிப்படையினர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com