

புதுடெல்லி,
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் யோகி ஆதித்யநாத் பேசியதாகப் புகார் எழுந்தது.இதன் அடிப்படையில், முதல்கட்ட விசாரணையில் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு முஸ்லிம்கள் மேல் நம்பிக்கை இருந்தால், எங்களுக்கு ஹனுமன் மேல் நம்பிக்கை உள்ளது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். முஸ்லிம்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் யோகி இவ்வாறு தெரிவித்திருந்தார்.தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.