டெல்லியில் 10 நாடுகளின் பிரதிநிதிகள் ஓட்டுப்பதிவை பார்த்தனர்

டெல்லியில் 10 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஓட்டுப்பதிவை நேரில் பார்த்தனர்.
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற 6-வது கட்ட வாக்குப்பதிவை வெளிநாட்டு தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர். ரஷியா, மியான்மர், பூடான், கம்போடியா, போஸ்னியா, வங்காளதேசம், கென்யா, மெக்சிகோ, மலேசியா, இலங்கை ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

அவர்கள் வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் 12 வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்த்தனர். ஓட்டுப்பதிவையும், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இயங்குவதையும் பார்த்து வியந்தனர்.

இதுகுறித்து ரஷிய தேர்தல் கமிஷன் உறுப்பினர் செவ்செங்கோ கூறியதாவது:-

ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இயங்குவதை பார்ப்பது சுவையாக இருந்தது. ரஷியாவில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களும் இதே போன்றவைதான். தேர்தல் பார்வையாளர்களுடனும் பேசினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com