ரஷியாவில் விமானத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி சிக்கினார்

ரஷியாவில் விமானத்தில் பயணம் செய்த ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் சிக்கினார்.
ரஷியாவில் விமானத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி சிக்கினார்
Published on


மாஸ்கோ,

ரஷியாவின் தன்னாட்சி பிரதேசம் தாகெஸ்தான். அங்குள்ள விமான நிலையத்தில் இஸ்தான்புல்-மாகச்கலதா விமானம் நின்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் பிய்சுல்தான் ஜாமலாவ் எனவும், அவர் ஏற்கனவே துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் என்றும் தெரியவந்தது. அவர் சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த நபர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இவர் சிரியாவில் 2016 செப்டம்பர் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் இருந்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

அவர் முதலில் நுஸ்ரா முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து இயங்கியதும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

விமானத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி பிடிபட்டது, சக பயணிகள் மத்தியிலும், தாகெஸ்தான் விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com