மும்பையில் 2 பயங்கரவாதிகள் கைது - தாக்குதல் நடத்த திட்டம்

பயங்கரவாதிகள் இருவரிடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் 2 பயங்கரவாதிகள் கைது - தாக்குதல் நடத்த திட்டம்
Published on

மும்பை,

தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மராட்டிய மாநிலம் மும்பையில் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதும் அவர்கள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து ஜெய்ஷ் இ முகமது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

பயங்கரவாதிகள் முசாப் அகமது, முகமது ஹமது ஆகிய இருவரும் மும்பையில் இருந்து டெல்லி சென்று அங்கு குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரிடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com