

நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டைக்கு வரும் பிரதமரை பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.. அதன்பிறகு முப்படை மற்றும் டெல்லி காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு, விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். தனது உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் பேசிவருகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக துணிச்சலுடன் போராடி, தியாகம் செய்து, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.அவர்கள் கண்ட கனவுகள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.140 கோடி இந்தியர்களின் சக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்தியா புதிய உச்சங்களை நோக்கி முன்னேறி வருகிறது. வரும் காலங்களில் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் தொடர்ந்து முன்னேறட்டும்"என்றார்.