முதல்-மந்திரி மற்றும் பிரதமராக 20 ஆண்டுகளை நிறைவு செய்தார் பிரதமர் மோடி; அமித் ஷா வாழ்த்து

பொதுப்பணியில், நாட்டின் உயரிய பொறுப்புகளை வகித்து 20 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு அமித் ஷா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதல்-மந்திரி மற்றும் பிரதமராக 20 ஆண்டுகளை நிறைவு செய்தார் பிரதமர் மோடி; அமித் ஷா வாழ்த்து
Published on

புது டெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பொதுப்பணியில் நாட்டின் உயரிய பொறுப்புகளை வகித்து 20 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

அமித் ஷா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,

நரேந்திர மோடி ஜி 20 வருடங்களுக்கு முன் இதே நாளில் குஜராத் மாநில முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கிருந்து தொடங்கிய வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் பயணம் இன்று வரை தொடர்கிறது.பிரதமர் மோடி தன்னுடைய அசாதாரண சிந்தனைகள் மூலம் சாத்தியமற்ற செயல்களை சாத்தியமாக்கி காட்டும் நபர். தன்னுடைய 20 வருட பொதுப்பணியில் ஏழைகளின் நலனுக்காக உழைத்தவர் என்று புகழுரை சூட்டியுள்ளார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக பிரதமர் மோடியிடம் நெருங்கிய நட்பு கொண்டுள்ளவர் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.அவர் மேலும் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முதலில் குஜராத் அரசாங்கத்தில் தனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது, அதன்பின், மத்திய அரசாங்கத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

நாம் அனைவரும் நம்முடைய முழு முயற்சியையும் கொடுத்து உறுதியான மற்றும் சுய-சார்பு இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 2001ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் குஜராத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். 2014ம் ஆண்டு முதல் முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பா.ஜ.க தலைவர்கள் மோடியின் தலைமையை பாராட்டியுள்ளனர். மேலும், நல்லாட்சி மற்றும் மேம்பாட்டை ஏற்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இருபது ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக சி.எம் டூ பி.எம் என்னும் ஹாஷ்டேக் இன்று டுவிட்டரில் டிரெண்ட்டாகி வருகிறது. பல்வெறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com