டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்

அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்று எழுதினார்.
அன்னா ஹசாரே
Published on

மும்பை,

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகில்யாநகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக நேற்று மவுன போராட்டம் நடத்தினார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, அதாவது 2 மணி நேரம் அவர் மவுனமாக இருந்தார்.

போராட்டத்துக்கு பிறகு அவர் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்திக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக, அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்று எழுதினார். அதில், "மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். மாணவர்களின் கருத்துகளை அரசு பொறுமையுடன் கேட்கவேண்டும். அவர்களுடன் நேர்ம றையான பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு நல்ல தீர்வை காணவேண்டும்" என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com