மனைவி இறந்த சில நிமிடங்களில் அசாம் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மனைவி இறந்த துக்கம் தாளாமல் துப்பாக்கியால் தன்னே தானே சுட்டுக்கொண்டார்.
மனைவி இறந்த சில நிமிடங்களில் அசாம் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐ பி எஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் தலைநகர் கவுகாத்தியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஷிலாதித்யா சேத்தியா பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கு அவர் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். அங்கிருந்தவர்கள் ஷிலாதித்யா சேத்தியாவுக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றினர். ஆனாலும் தனது மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஷிலாதித்யா சேத்தியா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஷிலாதித்யா சேத்தியா மற்றும் அவரது மனைவிக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com