

ரகசிய வீடியோ விவகாரம்
கர்நாடக மந்திரிகளை ரகசிய வீடீயோ எடுத்து மிரட்ட முயற்சிகள் நடப்பதாக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் எச்சரித்தார். உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் மந்திரிகளை அவர் எச்சரித்ததாக கூறப்பட்டது. பின்னர் தன்னையும் ரக சிய வீடியோ எடுக்க முயற்சி நடந்ததாக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில், முன்னாள் முதல்-மந்திரி சித்தரா மையா தொடர்பான ரகசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
அந்த வீடியோக்கள் வெளியாகமல் இருக்க கோர்ட்டு மூலமாக தடை பெற்ற சித் தராமையா, பெங்களூரு சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார். இந்த ரக சிய வீடியோ விவகாரம் தற்போது கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், ரகசிய வீடியோ விவகாரத்தில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேலும் சில தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகு றித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு தொழில் அதிபர் சந்தித்து பேசினார். அப்போது ஏ.ஐ. வசதியுடன் கூடிய நவீன கண் கண்ணாடியை அணிந் திருந்தார். அந்த கண்ணாடியை பார்த்ததும் நான் சுதாரித்து கொண்டேன். அந்த தொழில் அதிபர் பற்றியும், அவர் அணிந்திருந்த கண்ணாடி பற்றியும் விசாரித் தேன். அது ஏ.ஐ. வசதியுடன் கூடிய மெட்டா ஸ்மார்ட் வகையை சேர்ந்தது என தெரிவித்தனர். இதே கண்ணாடியை அணிந்து கொண்டு, அந்த தொழில் அதிபர் கேரள மாநிலம் முதல்-மந்திரி வி.டி.சதீஷனையும் சந்தித்து பேசி இருந்தார்.
அதே தொழில் அதிபர் ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய மந்தி ரியை சந்தித்து பேசியபோது, அந்த கண்ணாடியை அணியவில்லை. இதன்மூ லம் என்னையும், கேரளம் மாநில முதல்-மந்திரியையும் அந்த தொழில் அதிபர் உளவு பார்த்து சிக்க வைக்க சதி செய்திருக்கலாம் என உணர்ந்தேன். இதே தொழில் அதிபர், கர்நாடகத்தை சேர்ந்த 5 மந்திரிகளையும் சந்தித்து பேசி இருந்தார். அதனால் தான் ரகசிய வீடியோ விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக் கும்படி மந்திரிகளை எச்சரித்திருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.