பயங்கரவாதத்துக்கு ஆதரவு கருத்து: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அசாம் எம்.எல்.ஏ., கைது


பயங்கரவாதத்துக்கு ஆதரவு கருத்து: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அசாம் எம்.எல்.ஏ., கைது
x

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்துக்கு ஆதரிக்கும் வகையிலும் அவ பேசி இருந்தார்.

கவுகாத்தி,

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த சூழலில் அசாமின் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், , பயங்கரவாதத்துக்கு ஆதரிக்கும் வகையிலும் பேசி இருந்தார். இதற்காக அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இதுபற்றி கருத்து தெரிவித்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அமினுல் இஸ்லாம் பேசியது கட்சியின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து. அதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறியிருந்தது.

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கருத்துகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளுக்காக மாநிலத்தில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தக் கைதுகள் குறித்து அடிக்கடி டுவீட் செய்து வருகிறார்.

இதன்படி, "தேச விரோதிகள் மீதான நடவடிக்கை தொடர்கிறது.. அவர்களின் தேச விரோத நடவடிக்கைகளுக்காக அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story