மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் வங்காளதேச பிரதமர் ஹசீனா

விமானம் மூலம் புதுடெல்லி வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஹசீனாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் வங்காளதேச பிரதமர் ஹசீனா
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் வரும் 9-ந்தேதி(நாளை) நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்காளதேச பிரதமர் ஹசீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று, பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்காளதேச பிரதமர் ஹசீனா இந்தியா வந்துள்ளார். விமானம் மூலம் புதுடெல்லி வந்துள்ள அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளின் தலைவர்கள் நாளை இந்தியா வரவுள்ளனர்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதுடன், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள விருந்திலும் உலக தலைவர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com