பாகிஸ்தானியர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவோம் என அறிவிக்க தயாரா? -காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால்

பாகிஸ்தானியர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவோம் என அறிவிக்க தயாரா? என்று காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானியர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவோம் என அறிவிக்க தயாரா? -காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால்
Published on

போக்னாடியா,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போக்னாடியா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: -

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை அச்சப்படுத்தி அரசியல் லாபம் பெற காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன. ஆனால் குடியுரிமைச் சட்டத்தால் முஸ்லிம்கள் உட்பட இந்திய குடிமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நான் உறுதியளிக்கிறேன்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி விரட்டப்பட்டவர்களுக்காகவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் எந்த ஒரு இந்தியரின் குடியுரிமையையும் பறிக்காது. இந்தியர்களை எந்த வகையிலும் இந்தச் சட்டம் துன்புறுத்தாது.

பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்குவோம், காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? நகர்புற நக்சல்கள் இந்த பிரச்சினையில் மாணவர்களை அரசுக்கு எதிராக தூண்டி விட முயலுகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com