

புதுடெல்லி
ஸ்பெயின் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய சம்பவத்தில், 8 இந்தியர்கள் உயிர் தப்பினர்.
ஸ்பெயின் அருகே சரக்கு ஏற்றியபடி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் 8 இந்தியர்கள் பயணித்தனர். இந்நிலையில், அந்த கப்பல் திடீரென கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில், 8 இந்தியர்களும் உயிர் தப்பி உள்ளனர்.
இதுபற்றி கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் கூறும்போது, சரக்கு கப்பல் கடலில் மூழ்கியபோது, அதில் பயணித்த இந்திய ஊழியர்கள் 8 பேரும் உயிர் தப்பி விட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நம்முடைய கடல் பணியாளர்களின் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் நலன் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, தொடர்ந்து கப்பல் மேலாளரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
கப்பல் மூழ்குவதற்கு முன்பு, அவர்கள் அனைவரும் கப்பலை விட்டு விட்டு தப்பி சென்றனர். எனினும், கப்பல் மூழ்கியதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி கப்பல் நிறுவனம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.