சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு பாடப் புத்தகங்கள்: என்.சி.இ.ஆர்.டி. வெளியீடு

9-ம் வகுப்பு பாட புத்தகங்கள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடப்பதால், வரும் 15-ம் தேதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் என என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்தது.
சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு பாடப் புத்தகங்கள்: என்.சி.இ.ஆர்.டி. வெளியீடு
Published on

புதுடெல்லி,

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, புதிய கல்விக் கொள்கையின்படி இந்த ஆண்டு, 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன.

கடந்த 1ம் தேதி முதல் புதிய கல்வியாண்டு துவங்கி உள்ள நிலையில், 9-ம் வகுப்பு பாட புத்தகங்கள் கிடைக்காதது சர்ச்சையானது. இதனையடுத்து பாட புத்தகங்கள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடப்பதால், வரும் 15-ம் தேதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் என என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்தது.

இதனையடுத்து தற்போது ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளுடன் அறிவியல் பாடத்துக்கான புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி. டில்லியில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com