ஆந்திராவுக்கு கூடுதல் நிதி தேவை: பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திய சந்திரபாபு நாயுடு
மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி,
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஆந்திர மாநிலம் தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து சந்திரபாபு நாயுடு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.