

டெல்லி,
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான என்.சி.ஆர். மண்டலத்தில் நேற்று முன்தினம் தான் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சி.என்.ஜி. எரிவாயுவின் விலை கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தொடர் விலை உயர்வின் காரணமாக, டெல்லியில் இதுவரை விற்கப்பட்டு வந்த விலையிலிருந்து உயர்ந்து, இப்போது ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.80.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளில் சிஎன்ஜி கியாசின் விலை கிலோவுக்கு ரூ.88.70-ஆக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வுகள், அன்றாடம் வாகனங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களையும், குறிப்பாக கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களையும் பெரிதும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.