

புதுடெல்லி,
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் உடன் மத்திய மந்திரிகள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங்வுடன் சுமார் 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை நடுநிலையான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும் என்று சிஜேபி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து 2வது முறையாக சந்திப்பு நடைபெற்றது. கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்ததாக சிஜேபி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாளை மாலை நாடு முழுவதும் மாவட்ட அளவில் மெழுகுவர்த்தி பேரணி நடத்தக் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எழுதி உள்ள கடிதத்தில்,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வழிகாட்டுதலின் படி, கட்சி நிர்வாகிகள் உங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒவ்வொரு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கும் (டிசிசி) 2 நாளை மாலை ஒரு மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி மற்றும் சத்தியாகிரகத்தை நடத்துமாறு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாக சத்தியாகிரகம் நடத்தப்படுவதோடு, மாவட்ட தலைநகரங்களில் உள்ள மகாத்மா காந்தி அல்லது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைகளை நோக்கிச் சென்று அங்கு முடிவடையும் வகையில் பேரணி திட்டமிடப்பட வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
"தேர்வு நேர்மை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது" என்றும், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பேரணியில் வலியுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.