தொகுதி மறுவரையறை மசோதா:தென் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை - டி.கே.சிவக்குமார் பேட்டி

புதிய மசோதா விவகாரம் பற்றி தென் மாநிலங்களின் அரசியல் கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும் என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா:தென் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை - டி.கே.சிவக்குமார் பேட்டி
Published on: 

பெங்களூரு,

தொகுதி மறுவரையறை மசோதாவில் பா.ஜனதா அரசியல் செய்வதாகவும், இந்த விவகாரம் பற்றி தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோ சனை நடத்த உள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முதல்-மந்திரிகள் ஆலோசனை

தொகுதி மறுவரையறை புதிய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்க ளுக்கு அநீதி ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தொகுதி மறுவரைய றையால் வடமாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக் கும். இதன் மூலமாக தேசிய அரசியலில் தென் மாநிலங்கள் சிறுபான்மை ஆகும் என்ற ஆதங்கம் உள்ளது.

டெல்லியில் நாளை (இன்று) தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று (நேற்று) இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறேன். இந்த கூட்டத்தில் தெலுங்கானா, கேரள மாநில முதல்-மந்திரிகள் பங் கேற்க உள்ளனர். அவர்களுடன் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பேசப்படும். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தென் மாநிலங்களின் குரலை...

தென் மாநிலங்கள், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் பங்களிப்பை அளித்துள்ளது. இதனால் தென் மாநிலங்களின் குரலை ஒடுக்க சாத்தியமில்லை. இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசு அனைத்துக்கட்சி தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசு அரசியல் செய்கிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் கருத்து சரி யானதாகும்.

அநீதி ஏற்பட விடமாட்டோம்

தொகுதி மறுவரையறை புதிய மசோதா விவகாரம் பற்றி தென் மாநிலங்களின் அரசியல் கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். தொகுதி மறுவரையறை பற்றியும், பெண்கள் இடஒதுக்கீடு பற்றி யும் பிரதமர் மோடி கூட பேசி இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் தென்மாநிலங்களின் நலன் காக்கப்படுவதுடன், தேசிய அரசியலில் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். தென் மாநிலங்களுக்கு அநீதி ஏற்பட விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X