டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு சம்மன்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு சம்மன்
Published on

டெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பப்பட்ட முதல் 3 சம்மன்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகததை எதிர்த்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை கூடுதலாக வழக்கு தொடர்ந்துள்ளது. கூடுதலாக அனுப்பப்பட்ட 5 சம்மன்கள் தொடர்பான விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆகாதத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, வழக்கு தொடர்பாக வரும் 16ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com