மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ரஷ்ய பயணம் செய்ய உள்ளார்.
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

மாஸ்கோ,

ரஷ்யாவில் அடுத்த வாரம் சர்வதேச பாதுகாப்பு தொடர்பாக 7-வது மாஸ்கோ மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்யும் நிர்மலா சீதாராமன், ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி உள்ளிட்ட சில மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தியா- ரஷ்யா இடையேயான பாரம்பரிய நட்பை நிலைநிறுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது. ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம், இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com