டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதலாக 1,400 வீரர்களை நியமிக்க ஒப்புதல்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதலாக 1,400 வீரர்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதாக சமீபகாலமாக சர்ச்சை எழுந்துள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 ஆயிரம் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, கூடுதலாக 1,400 வீரர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 3 முனையங்களில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. அப்பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பு பணியை கவனிப்பார்கள்.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com