டெல்லி: மசாஜ் என்ற பெயரில் 4 இடங்களில் விபசாரம்; 29 பெண்கள் மீட்பு

இதில், பஹர்கஞ்ச், நபி கரீம் மற்றும் கரோல் பாக் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் சோதனை நடந்தது.
ai image
ai image
Published on: 

புதுடெல்லி

டெல்லியில் மசாஜ் என்ற பெயரில் 4 இடங்களில் விபசாரம் நடந்த நிலையில், 29 பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

மத்திய டெல்லி பகுதியில் மசாஜ் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் விபசாரம் நடந்து வருகிறது என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தீவிர விசாரணை நடந்தது.

15 பேர் கைது

இதில், பஹர்கஞ்ச், நபி கரீம் மற்றும் கரோல் பாக் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் சோதனை நடந்தது. அப்போது, மசாஜ் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் தள்ளியது தெரிய வந்துள்ளது.

இந்த சோதனைக்கு முன்பு, போலீசாரே வாடிக்கையாளர்கள் போன்று அந்த மையங்களுக்கு சென்றிருந்தனர். அதில், விபசாரம் நடப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து, ஸ்பா உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 15 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

29 பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

X