

புதுடெல்லி
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையிலேயே பிற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
எனினும், தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.