டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு; பிரதமர் இழப்பீடு அறிவிப்பு

தீ விபத்தில் காயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து:  பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு; பிரதமர் இழப்பீடு அறிவிப்பு
Published on

புதுடெல்லி

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையிலேயே பிற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

எனினும், தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

இதுவரை 37 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களில் பலர் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்குவார்கள் என பதிவிட்டு உள்ளார்.

பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com