டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து; 2 பேர் பலி

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து; 2 பேர் பலி
Published on

புதுடெல்லி,

டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாட்டிற்குள் சிக்கியிருப்பவர்களை நேற்றிலிருந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இடிபாட்டில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் உள்ளே சிக்கி இருப்பதால் அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com