புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான வரைவு விதிமுறைகள் வெளியீடு

பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளன.
புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான வரைவு விதிமுறைகள் வெளியீடு
Published on

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்ற 100 நாள் வேலைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய மத்திய அரசு, அந்த திட்டத்தை சீரமைத்து, 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்' (வி.பி.-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, மேற்கண்ட புதிய ஊரக வேலைவாய்ப்பு திட் டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித் துள்ளது. இதைத்தொடர்ந்து, அச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. சட்டத்தின் 33-வது பிரிவு மற்றும் இதர பிரிவுகளின்கீழ், இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இவை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. மாநிலங்கள், அமைப்புகள், நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விதிமுறைகளில், நிர்வாக செலவுகள், குறைதீர்ப்பு, சம்பளம் வழங்குதல், வேலைவாய்ப்பின்மை படி, சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் செலவுகள் ஆகி யவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com