

மும்பை,
கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை சேர்ந்த ஜெஸ்ரீல் லுவோடா என்ற பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் அவர் உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1,426 கிராம் கொகைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.7 கோடி ஆகும். இதையடுத்து ஜெஸ்ரீல் லுவோடாவை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தென் மும்பையின் நாக்பாடா பகுதியை சேர்ந்த பட்டேலையும் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.