நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
Published on

மும்பை,

ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். ராஜ்குந்த்ரா மீதான பண மோசடி குறித்த வழக்கு நடந்து வரும் நிலையில், அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள ராஜ்குந்த்ராவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை மற்றும் உத்தரபிரதேசத்தில் சுமார் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com